ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தகவல்
Posted on January 07, 2026 by Gopal
அரசியல்
ஈரோடு மாவட்டஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தகவல்-
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை எதிர்வரும் 15.01.2026 -ஆம் தேதியன்று சிறப்பாக கொண்டாடும் விதமாக பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ மற்றும் முழுக் கரும்பு 1 ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.3000/- அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.3000/- பெறுவதற்கு பகுதி வாரியாக டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன்கள் பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் 08.01.2026 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். இப்பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.3000/- வழங்குவது தொடர்பாக புகார்கள் ஏதேனுமிருப்பின் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் மற்றும் 0424-2252052 தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம். மேற்காணும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.3000/-ஐ பெற்று குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.