ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி செய்திக்குறிப்பு
Posted on August 06, 2026 by Gopal
அரசியல்
தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு/கண் கருவிழி சரிபார்ப்பு (eKYC) மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளுக்கும் 02.08.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல் ரேகை/கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் e-KYC பணி மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும்பொருட்டு 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய நாள்களில் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதால் மேற்படி, சிறப்பு முகாமில் கைவிரல் ரேகை பதிவை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை (eKYC) பதிவு செய்து பயனடையுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.