ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி அறிக்கை
Posted on December 29, 2025 by Gopal
அரசியல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காலிங்கராயர் அவர்களின் முழு உருவ வெண்கல சிலையை வேறொரு சரியான, வசதியான இடத்தில் அமைக்கவேண்டுமென்று எங்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
சிலைக்கு மாலையிட வரக்கூடியவர்களுக்கு எந்தவித இடையூறும், போக்குவரத்து நெரிசலும் இல்லாத வகையில் ஒரு விசாலமான இடத்தை தேர்ந்தெடுக்க முயற்சித்தோம். ஆனால், பல இடங்களை பார்த்தும், பொருத்தமான இடம் அமையவில்லை.
தற்போது வசதியாக ஒரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. அந்த இடம் ஏற்கனவே சிலை இருந்த இடத்திற்கு அருகாமையில் "ராஜா அவென்யு", அதாவது அருள்மிகு ராசாக்கோவிலுக்கு பக்கத்திலேயே சாலை வசதியோடு அமைந்துள்ளது.சிலை அந்த இடத்தில் காலிங்கராயர் அவர்களின் முழு உருவ வெண்கல அரசு அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கை வைக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, காலிங்கராயர் அவர்களின் முழு உருவ வெண்கல சிலையை செய்தவரிடமே இந்த சிலையையும் செய்வதற்கு பேசப்பட்டு சிலை செய்கின்ற பணி நடந்து வருகிறது.
மேற்கண்ட இடத்தில் ஒரு சிறிய நூலக கட்டிடம் கட்டப்படும். அதில் காலிங்கராயர் அவர்கள் சம்பந்தப்பட்ட நூல்களும் போட்டித்தேர்வுக்காக மாணவ, மாணவிகள் படிப்பதற்கான நூல்களும் வைக்கப்படவுள்ளன. அந்த கட்டிடத்திற்கு மேலே சிலை அமைக்கப்படும்.
காலிங்கராயன்அணை பாசனத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளான தை 5-ம் தேதிக்குள் (19.01.2026) இப்பணிகள் அனைத்துமே முடிக்கப்படும்.
எனவே, தை 5-ம்தேதி (19.01.2026) காலிங்கராயர் அவர்களின் முழு உருவ வெண்கல சிலை, திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு வீட்டுவசதி மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான சு.முத்துசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.