FLASH NEWS
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவு சேலம் சங்ககிரி பகுதியில் கடந்த ஒரு வருடமாக இரவு நேரத்தில் உலா வந்த ஆண் சிறுத்தை அடையாளம் தெரியாத வாகன மோதி பலி திங்கட்கிழமை (11.05.2026) முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இதர குறைத்தீர்க்கும் கூட்டங்களும் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெற உள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தகவல்

2024-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளை சென்னையில் தமிழக முதல்வர் வழங்கினர்

Posted on November 20, 2025 by Admin User
அரசியல்
2024-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளை சென்னையில் தமிழக முதல்வர் வழங்கினர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.11.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 2024-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளை சென்னை, மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் தெ. ஞானசுந்தரம் (மரபுத் தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் இரா. காமராசு (ஆய்வுத் தமிழ்), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த க. சோமசுந்தரம் (எ) கலாப்ரியா (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந.அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Share this article:

Comments

No approved comments yet. Be the first to comment!

Advertisement
Related Posts